sivakarthiyen prince movie shooting wrapped

Advertisment

சிவகார்த்திகேயன், 'டான்' படத்தை தொடர்ந்து பிரபல தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கும் 'ப்ரின்ஸ்' படத்தில் நடித்து வருகிறார். கதாநாயகியாக உக்ரைன் நாட்டு நடிகை மரியா ரியாபோஷாப்கா நடிக்கிறார். சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இப்படத்தை 'ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ்' நிறுவனத்துடன் இணைந்து 'சுரேஷ் புரொடக்ஷன்' நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் இரண்டு பாடல்கள் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

இந்நிலையில் 'ப்ரின்ஸ்' படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் நிறைவடைந்துள்ளது. மேலும் கடைசியாக ஒரு பாடலை படமாக்கியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளனர். மேலும் படப்பிடிப்பு முடிவடைந்ததை கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் படக்குழு வெளியிட்டுள்ளார்கள். மேலும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற அக்டோபர் 9ஆம் தேதி நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.