sivakarthikeyan's don movie update out now

இயக்குநர்நெல்சன் திலீப்குமார்இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'டாக்டர்' திரைப்படம் வசூல் ரீதியாக பெரும் வெற்றிபெற்றது. இதை தொடர்ந்துஅறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘டான்’ திரைப்படம் உருவாகிவருகிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார்.கல்லூரி கதைக்களத்தில், முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகும் இப்படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சூரி கல்லூரி மாணவர்களாக நடித்துவருவதாகக் கூறப்படுகிறது.இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

Advertisment

‘டான்’ படத்தின் படப்பிடிப்பு சென்னை, கோயம்புத்தூர், பொள்ளாச்சி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது. இப்படத்தின் அனைத்து படப்பிடிப்பு பணிகளும் முடிந்து, படக்குழு டப்பிங் பணியில் தீவிரம் காட்டிவருகிறது. இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் ‘டான்’ படத்தில்தனது டப்பிங் பணியை முடித்துள்ளதாக கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "அடாது மழையிலும் விடாது டப்பிங்,”என குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

மேலும், “உணர்வுபூர்வமாக இருக்கிறேன்.மீண்டும் எனது கல்லூரி நாட்களுக்குப் பயணம் செய்தேன்.இந்தப் பயணம் எனக்குப் பிடித்திருந்தது” எனத் தெரிவித்துள்ளார்.