அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘டான்’ திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். சமுத்திரக்கனி, சிவாங்கி, பாலா சரவணன் ஆகியோர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கல்லூரி கதைக்களத்தில், முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகும் இப்படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சூரி கல்லூரி மாணவர்களாக நடித்து வருவதாகக் கூறப்படுகிறது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தை லைகா நிறுவனத்துடன்இணைந்துஎஸ்.கே புரொடக்சன் தயாரிக்கிறது.
சென்னை கோயம்புத்தூர், பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பை நடத்தி முடித்த படக்குழு படத்தின் இறுதிக்கட்ட பணியில் தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் டான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அதில்," நடிகர் சிவகார்த்திகேயன் ஸ்டைலான தோற்றத்தில் கல்லூரி அடையாள அட்டையுடன் தோன்றியுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
Here is the first look of #DON ? #DONFirstLook@Dir_Cibi@anirudhofficial@priyankaamohan@iam_SJSuryah@thondankani@sooriofficial@KalaiArasu_@SKProdOffl@LycaProductions@bhaskaran_dop@Inagseditor@Bala_actor@RJVijayOfficial@sivaangi_kpic.twitter.com/Y0a8wGA4AK
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) November 10, 2021