சிவகார்த்திகேயன் படத்தில் நாச்சியார் நாயகி...

evana

மிஸ்டர் லோக்கல் படத்தை தொடர்ந்து ரவிக்குமார் இயக்கும் சயின்ஸ் பிக்‌ஷன் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார் சிவகார்த்திகேயன். 24 ஏ.எம் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சுமார் 20 நாட்கள் நடைபெறவுள்ளது.

இந்த படத்தை அடுத்து இரும்புத்திரை இயக்குனர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இது சிவகார்த்திகேயனுக்கு 15வது படமாகும். தற்போது இந்த படத்திற்கான நடிகர்கள் தேர்வு செய்யப்பட்டு, ஒப்பந்தங்கள் நடைபெற்று வருகிறது. நாயகியாக கல்யாணி ப்ரியதர்ஷன், அர்ஜுன் ஆகியோர் சிவகார்த்திகேயனுடன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களை அடுத்து பாலாவின் இயக்கத்தில் வெளியான நாச்சியார் படத்தில் நாயகியாக நடித்த இவானா இப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

மார்ச் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்க ஆயத்தமாகி வருகிறது படக்குழு. இப்படத்துக்கு ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, யுவன் இசையமைக்கவுள்ளார். எடிட்டராக ரூபன் பணிபுரியவுள்ளார்.

sivakarthikeyan
இதையும் படியுங்கள்
Subscribe