Advertisment

செல்லம்மாவை தொடர்ந்து 'பெப்பி'...  ‘நாய் சேக’ருக்கு பாடல் எழுதிய சிவகார்த்திகேயன் 

sivakarthikeyan wrote lyric for naai sekar movie

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகரான சதீஷ், கிஷோர் ராஜ்குமார் இயக்கத்தில், ஏ.ஜி.எஸ். தயாரிப்பில் உருவாகிவரும் ‘நாய் சேகர்’ படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தில் சதீஷிற்கு ஜோடியாக குக் வித் கோமாளி புகழ் பவித்ரா நடிக்கிறார். ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் 21வது படமான ‘நாய் சேகர்’, முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகிவருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பானது தற்போது முழுவீச்சில் நடைபெற்றுவருகிறது.சமீபத்தில் வெளியான படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

Advertisment

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="9cb1f486-f36c-452c-9859-61f4d6a88443" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/Bachelor-article-inside-ad_18.jpg" />

Advertisment

இந்நிலையில், ‘நாய் சேகர்’ படத்தில்நடிகர் சிவகார்த்திகேயன் 'பெப்பி..’ என்ற பாடலை எழுதியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பான போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. சமீபத்தில் வெளியான ‘டாக்டர்’ படத்தில் சிவகார்த்திகேயன் எழுதிய 'செல்லம்மா..' பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தை தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யாநடிக்கும் 'எதற்கும் துணிந்தவன்' படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு பாடல் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

actor sivakarthikeyan actor sathish Naai Sekar
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe