லோகேஷ் கனகராஜ் பட படப்பிடிப்பு தளத்தில் சிவகார்த்திகேயன்

sivakarthikeyan visit lokesh kanagaraj benz movie shooting spot

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தற்போது ரஜினியை வைத்து ‘கூலி’ என்ற தலைப்பில் ஒரு படம் இயக்கி வருகிறார். இப்படம் வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தை அடுத்து கைதி 2 படத்தை கைவசம் வைத்துள்ளார். மேலும் பாலிவுட்டில் ஆமிர் கானுடன் ஒரு படம் பண்ணவுள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே லோகேஷ் கனகராஜ் கதையில் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘பென்ஸ்’. இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட், பேஷன் ஸ்டுடியோஸ், தி ரூட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படத்தின் அறிவிப்பு கடந்த ஆண்டு ஏப்ரலில் வெளியானது. இதையடுத்து இப்படம் எல்.சி.யு. கதையில் உருவாகுவதாக லோகேஷ் கனகராஜ் தெரிவித்தார். பின்பு ராகவா லாரன்ஸின் பிறந்தநாளன்று கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஒரு சிறிய வீடியோவை வெளியிட்டிருந்தார். அதில் ராகவா லாரன்ஸின் லுக் இடம்பெற்றிருந்தது. மேலும் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் படப்பிடிப்பு தொடங்கப்படாமல் இருந்த நிலையில் நேற்று பூஜையுடன் தொடங்கியது.

பூஜை முடிந்ததும் லோகேஷ் கனகராஜ் கிளாப் அடித்து படப்பிடிப்பை தொடங்கி வைத்தார். இந்த நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு சிவகார்த்திகேயன் விசிட் அடித்துள்ளார். இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்களை படக்குழுவினர் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். இப்படத்தின் இயக்குநர் பாக்கியராஜ் கண்ணனின் முதல் படமான ‘ரெமோ’ படத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எதிர்காலத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும் சிவகார்த்திகேயன் நடிக்க விருப்பம் தெரிவித்திருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.

actor sivakarthikeyan lokesh kanagaraj
இதையும் படியுங்கள்
Subscribe