அப்போ விஜய் சேதுபதி...இப்போ சிவகார்த்திகேயன்...ஃபார்ம் ஆனா பிரமாண்ட டீம்!

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான 'மிஸ்டர் லோக்கல்' படம் வரும் மே தினத்தை முன்னிட்டு வெளியாகவுள்ள நிலையில் இவர் அடுத்ததாக 'நேற்று இன்று நாளை' ரவிக்குமார் இயக்கும் படத்திலும், பி.எஸ்.மித்ரன் இயக்கும் ஹீரோ படத்திலும் நடித்து வருகிறார். மேலும் இவர் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவும் சமீபத்தில் ஒப்பந்தம் ஆனார்.

sivakarthikeyan

இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கும் புதிய படத்திலும் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார். லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கும் இப்படத்தின் அறிமுக போஸ்டர் தற்போது சமூக வலைத்தளத்தில் அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது. மேலும் அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூலை மாதம் தொடங்குகிறது. படம் வரும் 2020ஆம் ஆண்டு வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

lyca sivakarthikeyan vignesh shivan
இதையும் படியுங்கள்
Subscribe