sivakarthikeyan tweet about her father and don movie

Advertisment

'டாக்டர்' படத்தின் வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயன் அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடித்த படம் டான். இப்படத்தில் கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடிக்க, எஸ்.ஜே சூர்யா, சமுத்திரக்கனி,சூரி, பால சரவணன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக இளைஞர்கள் இப்படத்தை திரையரங்குகளில் கொண்டாடி வருகின்றனர். மேலும் இப்படத்தை பார்த்த ரஜினி உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் சிவகார்த்திகேயனின் முந்தைய படமான 'டாக்டர்' படத்தை போலவே தற்போது வெளியாகியுள்ள 'டான்'திரைப்படமும் ரூ. 100 கோடி வசூலை கடந்துள்ளது. இப்படத்தின் வெற்றி குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த சிவகார்த்திகேயன்," இதை நான் எனது அப்பாவிற்கு சமர்ப்பிக்கிறேன் என நெகிழ்ச்சியாக குறிப்பிட்டுள்ளார்.