sivakarthikeyan third baby update

தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன், தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் அமரன் படத்தில் நடித்துமுடித்துள்ளார். மேலும் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். அடுத்தாக வெங்கட் பிரபு, ரவிக்குமார் உள்ளிட்ட இயக்குநர்களுடன் ஒரு படத்தில் நடிப்பதாக ஒப்புக்கொண்டுள்ளார். இதனிடையே டான் படத்தை இயக்கிய சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவுள்ளதாகக்கூறப்படுகிறது.

Advertisment

இதனிடையே 2010ஆம் ஆண்டு ஆர்த்தி என்ற அவரது மாமா மகளை திருமணம் செய்தார். இந்தத்தம்பதிக்கு ஆராதனா என்ற பெண் குழந்தையும் குகன்தாஸ் என்ற ஆண் குழந்தையும்இருக்கிறார்கள். இதில் ஆராதனா, சிவகார்த்திகேயன் தயாரித்து நடித்த கனா படத்தில் ‘வாயாடி பெத்த புள்ள’பாடலை பாடி பலரது கவனத்தைப் பெற்றார்.

Advertisment

இந்த நிலையில் சிவகார்த்தியேன் தனக்கு மூன்றாவது குழந்தை பிறந்துள்ளதாகத்தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “எங்களுக்கு நேற்று இரவு (ஜூன் 2) ஆண் குழந்தை பிறந்திருக்கிறான் என்பதைப் பெருமகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறோம். ஆர்த்தியும் குழந்தையும் நலம். ஆராதனாவிற்கும் குகனிற்கும் நீங்கள் தந்த அன்பையும், ஆசியையும் எங்கள் மூன்றாவது குழந்தைக்கும் தர வேண்டுகிறோம்” என அவரது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதைத் தொடர்ந்து ரசிகர்கள், திரைப் பிரபலங்கள் எனப் பலரும்சிவகார்த்திகேயனுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.