/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/15_27.jpg)
நாக் அஷ்வின் தயாரிப்பில், இயக்குநர் அனுதீப் இயக்கத்தில், நவீன் போலிஷெட்டி, ப்ரியதர்ஷினி, ராகுல் ராமகிருஷ்ணா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான தெலுங்குதிரைப்படம் 'ஜாதி ரத்னாலு',கடந்த மார்ச் மாதம் வெளியானது. முழு நீளகாமெடி படமாக உருவாகியிருந்த இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு கிடைத்தது. மேலும், தெலுங்கு திரைத்துறைப் பிரபலங்கள் பலரும் இப்படத்தை வெகுவாகப் பாராட்டினர்.
இந்த நிலையில், 'ஜாதி ரத்னாலு' இயக்குநர் அனுதீப் இயக்கத்தில் அடுத்து உருவாகும் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன்மூலம், நடிகர் சிவகார்த்திகேயன் தெலுங்கு திரையுலகிற்குள் அடியெடுத்து வைக்கவுள்ளார். இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கவுள்ள தெலுங்கு திரைப்படத்தையும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)