Advertisment

கியாரா அத்வானியுடன் ஜோடி சேரும் சிவகார்த்திகேயன்

Sivakarthikeyan to team up with Kiara Advani

Advertisment

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ஹீரோவாக இருந்த சிவகார்த்திகேயன் அடுத்தடுத்த வெற்றிகளுக்கு பிறகு தற்போது முன்னணி ஹீரோவாக மாறியுள்ளார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'டான்' படம் 12 நாட்களில் 100 கோடி வசூல் செய்து வெற்றிகரமாக திரையரங்கில் ஓடிவருகிறது. இதனிடையே ரவிக்குமார் இயக்கத்தில் நடித்துள்ள 'அயலான்' படம் இந்தாண்டு கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று வெளியாகும் என கூறப்படுகிறது. இதனை அடுத்து பிரபல தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கும் 'எஸ்.கே 20' படத்தில் நடித்து வருகிறார். உக்ரைன் நாட்டு நடிகை மரியா ரியாபோஷாப்கா கதாநாயகியாக நடிக்கிறார். 'ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ்' தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இதனிடையே சிவகார்த்திகேயன் படத்தில் பிரபல இந்தி நடிகை கியாரா அத்வானி நடிக்கவுள்ளதாக தகவல் வந்துள்ளது. சிவகார்த்திகேயன் அடுத்ததாக 'மண்டேலா' படத்தின் இயக்குநர் மடோன் அஷ்வின் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கவுள்ளதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே சிவகார்த்திகேயன் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 'எஸ்.கே 21' படத்தில் நடிக்கவுள்ளார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இப்படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்கிறார்.

director Madonne Ashwin kiara advani. actor sivakarthikeyan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe