
தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ப்ரின்ஸ் படம் தீபாவளிக்கு வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து 'மண்டேலா' படத்தின் இயக்குநர் மடோன் அஷ்வின் இயக்கும் ’மாவீரன்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பள்ளி விழா ஒன்றில் சிவகார்த்திகேயன் பேசிய கருத்து ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அண்மையில் பள்ளியில் விழாவில் பேசிய சிவகார்த்திகேயன், டான் படத்தில் எனக்கும் சூரிக்கும் இடையே வரும் நகைச்சுவை வசனம் கொரியன் மொழியா என்று சில கேட்கிறார்கள். அது கொரியன் மொழி அல்ல, சும்மா பேசி பார்த்தோம், அது நல்லா வந்திருச்சு. பொதுவாக நான் கொரியன் படம் எல்லாம் பார்க்க மாட்டேன், ஏன்னா அதுல ஹீரோ யாரு... ஹீரோயின் யாரு...தெரியல. எல்லோரும் பார்க்க ஒரே மாறித்தான் இருப்பாங்க" என்று காமெடியாக சொன்னார். ஆனால் இணையவாசிகள் சிலர் சிவகார்த்திகேயன் கொரியா மக்களை அவமானப்படுத்தி விட்டதாக கூறி வருகின்றனர்.