Advertisment

போஸ்டர் வெளியிட்ட 'அயலான்' படக்குழு; ஏமாற்றமடைந்த ரசிகர்கள்!

sivakarthikeyan starring ayalaan movie poster released

'இன்று நேற்று நாளை' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் இயக்குநர் ரவிக்குமார். இவர், நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து 'அயலான்' என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தின் மொத்தப் படப்பிடிப்பையும்படக்குழு கடந்த ஆண்டே நிறைவு செய்துள்ளது. இருப்பினும் படத்தில் கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் சார்ந்த காட்சிகள் நிறைய உள்ளதால், படப்பிடிப்பு நாட்களுக்கு இணையான நாட்கள் படத்தின் சி.ஜி. பணிகளுக்குத் தேவைப்படுகிறது. இதனால்தான் படம் வெளியாவதில் தாமதமாகிறதுஎனப்படக்குழு தெரிவித்திருந்தது.

Advertisment

இந்நிலையில் சிவகார்த்திகேயனின் பிறந்த நாளை முன்னிட்டு 'அயலான்' படத்தின் சிறப்பு போஸ்டரைவெளியிட்டுபடக்குழு அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது. இதே போன்று டான்படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டுபடக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது. இதனிடையே சிவகார்த்திகேயனின் பிறந்த நாளை முன்னிட்டு 'அயலான்' படத்தின் டீசர் வெளியாகும் என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த நிலையில், படக்குழு போஸ்டரைமட்டுமேவெளியிட்டுள்ளதால்ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Advertisment

Don actor sivakarthikeyan ayalaan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe