Skip to main content

போஸ்டர் வெளியிட்ட 'அயலான்' படக்குழு; ஏமாற்றமடைந்த ரசிகர்கள்!

Published on 17/02/2022 | Edited on 17/02/2022

 

sivakarthikeyan starring ayalaan movie poster released

 

'இன்று நேற்று நாளை' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் இயக்குநர் ரவிக்குமார். இவர், நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து 'அயலான்' என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தின் மொத்தப் படப்பிடிப்பையும் படக்குழு கடந்த ஆண்டே நிறைவு செய்துள்ளது. இருப்பினும் படத்தில் கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் சார்ந்த காட்சிகள் நிறைய உள்ளதால், படப்பிடிப்பு நாட்களுக்கு இணையான நாட்கள் படத்தின் சி.ஜி. பணிகளுக்குத் தேவைப்படுகிறது. இதனால்தான் படம் வெளியாவதில் தாமதமாகிறது எனப் படக்குழு தெரிவித்திருந்தது. 

 

இந்நிலையில் சிவகார்த்திகேயனின் பிறந்த நாளை முன்னிட்டு 'அயலான்' படத்தின் சிறப்பு போஸ்டரை வெளியிட்டு படக்குழு அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது. இதே போன்று டான் படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டு படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது. இதனிடையே சிவகார்த்திகேயனின் பிறந்த நாளை முன்னிட்டு 'அயலான்' படத்தின் டீசர் வெளியாகும் என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த நிலையில், படக்குழு போஸ்டரை மட்டுமே வெளியிட்டுள்ளதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘குரங்கு பெடல்’ - சிவகார்த்திகேயன் பட அப்டேட்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
sivakarthikeyan produced Kurangu Pedal movie update

சிவகார்த்திகேயன் தற்போது கமல்ஹாசன் தயாரிக்கும் அமரன் படத்தில் நடித்து வருகிறார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அதே சமயம் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கும் படத்திலும் நடித்து வருகிறார். சென்னையில் முழு வீச்சில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. 

இதனிடையே சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இதன் சார்பில், கனா, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா, வாழ், டாக்டர், டான் உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார். இந்த நிலையில் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன் தயாரிப்பில் உருவாகும் அடுத்த திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஃபர்ஸ்ட் லுக் டீசருடன் அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் ‘குரங்கு பெடல்’ என்ற தலைப்பில் இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்தது மட்டுமல்லாமல் அதை வெளியிடவும் செய்கிறார். கமல்கண்ணன் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். 

ஃபர்ஸ்ட் லுக் டீசரில், ஒரு கிராமத்தில் ஒரு குடும்பம் மட்டும் நடந்தே போகும் நிலையில் அக்குடும்பத்தில் இருக்கும் சிறுவனுக்கு சைக்கிள் மீது ஆர்வமும் ஆசையும் வருகிறது. பின்பு அச்சிறுவன் சைக்கிள் வாங்கினானா? வாங்கிய பிறகு அவனுடைய வாழ்க்கை எப்படி மாறியது? ஏன் அவனின் குடும்பம் மட்டும் நடந்து போகும் சூழல் ஏற்பட்டது? போன்ற கதைக்களத்தை கொண்டு இப்படம் உருவாகியுள்ளது போல் தெரிகிறது. இப்படம் கோடைக்கு வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் ரிலீஸ் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

சிவகார்த்திகேயன் தயாரிக்கும் பட அப்டேட்

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
sivakarthikeyan produvtion movie update

சிவகார்த்திகேயன் தற்போது கமல்ஹாசன் தயாரிக்கும் அமரன் படத்தில் நடித்து வருகிறார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அதே சமயம் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கும் படத்திலும் நடித்து வருகிறார். சென்னையில் முழு வீச்சில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. 

இதனிடையே சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இதன் சார்பில், கனா, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா, வாழ், டாக்டர், டான் உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார். இந்த நிலையில் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன் தயாரிப்பில் உருவாகும் அடுத்த படத்தின் அறிவிப்பு நாளை வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் ஃபர்ஸ்ட் லுக் டீசருடன் அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்து ஒரு சிறிய வீடியோவை வெளியிட்டுள்ளனர். அதில் பள்ளியில் நடக்கும் கதைக்களத்தைக் கொண்டு படம் உருவாகியுள்ளது போல் தெரிகிறது.