/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/siva_94.jpg)
'இன்று நேற்று நாளை' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் இயக்குநர் ரவிக்குமார். இவர், நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து 'அயலான்' என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார்.ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தின் மொத்தப் படப்பிடிப்பையும்படக்குழு கடந்த ஆண்டே நிறைவு செய்துள்ளது. இருப்பினும் படத்தில் கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் சார்ந்த காட்சிகள் நிறைய உள்ளதால், படப்பிடிப்பு நாட்களுக்கு இணையான நாட்கள் படத்தின் சி.ஜி. பணிகளுக்குத் தேவைப்படுகிறது. இதனால்தான் படம் வெளியாவதில் தாமதமாகிறதுபடக்குழு எனக் கூறியுள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் எடிட்டர் ரூபன் கூறுகையில், "அயலான் படம் ஹாலிவுட் தரத்தில் இருக்கும். ஏலியன் சம்பந்தப்பட்ட காட்சிகள் ஹாலிவுட் படங்களையேமிஞ்சும் அளவுக்கு உருவாக்கப்பட்டு வருகிறது" எனக் கூறியுள்ளார். மேலும் அயலான் சிவகார்த்திகேயனின் சினிமா வாழ்க்கையில் முக்கிய படமாகவும், குழந்தைகளை கவரும் படமாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/2026/02/28/2026-02-28t064820155z-nlogo-2026-02-28-12-18-18.jpg)