"உதயநிதி சார் பக்கத்துல உட்கார்ந்து பார்ப்பேன்னு தெரிஞ்சிருந்தா அந்த டயலாக்கை எடுத்துருப்போம்" - சிவகார்த்திகேயன் கலகல பேச்சு  

Sivakarthikeyan speech at Trailer Launch Event

சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள டான் திரைப்படம் வரும் 13ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நேற்று மாலை நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், சமுத்திரக்கனி, எஸ்.ஜே.சூர்யா, இயக்குநர் சிபி, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் பேசுகையில், "இந்தப் படத்தை தயாரிக்க முன்வந்த லைக்கா ப்ரொடக்ஷன்ஸ்க்கு நன்றி. டான் படம் யாருக்கும் தெரியாத இதுவரை நீங்கள் பார்க்காத கதை அல்ல. இது நம் அனைவருடைய கதை. அனைவரது வாழ்க்கையிலும் நடந்த பதிவுதான் இந்தப் படம். அதை உணர்வுப்பூர்வமான ஒரு கதையாக்கியுள்ளார் இயக்குநர் சிபி. எனக்கு பிடித்த நான் மிகவும் ரசித்த அத்தனை பேரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். சமுத்திரக்கனி அண்ணன், எஸ்.ஜே.சூர்யா சார், சூரி அண்ணன், பிரியங்கா மோகன், விஜய், இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி.

இயக்குநர் சிபி கடுமையாக உழைக்கிறார். அவருக்கு என்ன வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருக்கிறார். அவர் கதை சொல்லும் விதமே ரொம்பவும் பிடித்திருந்தது. இதுவரை நான் வேலை பார்த்த படங்களிலேயே ஸ்பாட்டில் எனக்கு தோன்றிய ஒரு பஞ்ச் டயலாக்கை கூட பேச முடியாமல் இருந்தது இந்தப் படத்தில்தான். எனக்கு மட்டுமல்ல படத்தில் நடித்த அத்தனை பேருக்குமே இது நடந்தது. அனைவருமே ரசிக்கக்கூடிய ஃபீல் குட் என்டர்டெயினிங் படமாக இப்படம் இருக்கும்.

படத்தை வெளியிடும் உதயநிதி சாருக்கு நன்றி. நான் அரசியலுக்கு போகட்டா... அதுக்கு நிறைய பொய் சொல்லணும்... அப்ப வேண்டாம் என்று ட்ரைலரில் ஒரு டயலாக் இருந்தது. அந்த டயலாக் வந்ததும் உதயநிதி சார் என்னை பார்த்தார். நான் அவரிடம், இது முழுக்க முழுக்க கற்பனை சார். இந்த ட்ரைலரை உங்க பக்கத்தில் உட்கார்த்து பார்ப்பேன் என்று நான் எதிர்பார்க்கவில்லை. சிபி என்னை இப்படி கோர்த்துவிடுவார் என்று நினைக்கல சார்" என்று சொன்னேன். அவரும் ஓகே ஓகே என சிரித்துக்கொண்டே கூறிவிட்டார். இப்படி நடக்கும் என்று தெரிந்திருந்தால் அந்த டயலாக்கை எடுத்துருங்க என்று சொல்லியிருப்பேன்" எனப் பேசினார்.

actor sivakarthikeyan
இதையும் படியுங்கள்
Subscribe