Sivakarthikeyan

அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், தான்யா ரவிச்சந்திரன், ஆரி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள 'நெஞ்சுக்கு நீதி' திரைப்படம் வரும் 20ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.

Advertisment

விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட நடிகர் சிவகார்த்திகேயன் பேசுகையில்,"மூன்று நாட்களாக உதயநிதி சார் என்னோடுதான் பேசிக்கொண்டு இருக்கிறார். அதனால் அவருக்கே கொஞ்சம் போரடிச்சிருக்கும் என்று நினைக்கிறேன். ஆனால், ஒவ்வொரு முறை சந்திக்கும் போதும் அதே சிரித்த முகத்தோடு பேசுகிறார். சினிமாவில் இருந்துகொண்டு மற்றொரு வேலையை பார்க்க வேண்டும் என்றால் நிறைய நேரம் தேவைப்படும். ஆனால், இரண்டு மூன்று வேலைகளை ஒரே சமயத்தில்உதய் சார் செய்வதைப்பார்ப்பது ரொம்பவும் ஆச்சர்யமாக உள்ளது. அதை உங்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டுமென நினைக்கிறேன். இது உங்களுக்கு பரம்பரையாக வந்தது. எங்களுடைய பரம்பரையை எடுத்து பார்த்தால் சுகர்தான் இருக்கும். ஆனால், உதய் சாரோட பரம்பரையை எடுத்து பார்த்தால் அதில் சுறுசுறுப்பு இருக்கிறது.

Advertisment

அன்று டான் பட விழாவில், சினிமாவில் சிவகார்த்திகேயன்தான் உண்மையான டான் என்று உதயநிதி சார் விளையாட்டாக கூறினார். அதை எல்லோரும் சீரியஸாக எடுத்துக்கொண்டனர். உண்மையிலேயே உதயநிதி சார்தான் டான். கையில் ஆயுதம் வைத்திருப்பவர்களும் டான் தான். மனதில் தைரியம் வைத்திருப்பவர்களும் டான் தான். அந்த வகையில் நான் கூறுகிறேன்" என உதயநிதிக்கு புகழாரம் சூட்டினார்.