Advertisment

கமல் கூட்டணியில் மாவீரனாகும் சிவகார்த்திகேயன்? 

sivakarthikeyan sk21 tittle maveeran

இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவானடான் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனிடையே சிவகார்த்திகேயன் ரவிக்குமார் இயக்கத்தில் ’அயலான்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

Advertisment

இப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தற்போது பிரபல தெலுங்குஇயக்குநர்அனுதீப் இயக்கும் 'எஸ்கே 20' படத்தில் நடித்துவருகிறார்.இதையடுத்து ரங்கூன் படத்தின் இயக்குநர்ராஜ்குமார் பெரியசாமி 'எஸ்.கே 21' படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக சாய் பல்லவி நடிக்க, ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் கமல் தயாரிக்கவுள்ளார்.

Advertisment

இந்நிலையில் இப்படத்தின் தலைப்பு குறித்துசமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது. அதன்படி இப்படத்திற்கு படக்குழு 'மாவீரன்' எனப் பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இது குறித்தஅதிகாரப்பூர்வஅறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2009 ஆம் ஆண்டு ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் வெளியான 'மகதீரா' படத்தின் தமிழ் தலைப்பு 'மாவீரன்' என்பது குறிப்பிடத்தக்கது.

sai pallavi ACTOR KAMAL HASSHAN actor sivakarthikeyan SK 21
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe