Sivakarthikeyan releasing the trailer of Aishwarya Rajesh 'driver jamuna' movie

Advertisment

'காக்கா முட்டை' படத்தின் மூலம் பலரின் கவனத்தை பெற்ற ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறார். அந்த வகையில் 'மோகன்தாஸ்' மற்றும் 'துருவ நட்சத்திரம்' உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்துள்ளார். இதனை தொடர்ந்து மலையாளத்தில் வெற்றிபெற்ற 'தி கிரேட் இந்தியன் கிச்சன்' படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறார். இதனிடையே எஸ்.பி சௌத்ரி தயாரிப்பில் 'டிரைவர் ஜமுனா' படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 'வத்திக்குச்சி' படத்தை இயக்கிய கின்ஸ்லின் இப்படத்தை இயக்குகிறார். ஜிப்ரான் இசையமைக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது.

இந்நிலையில் 'டிரைவர் ஜமுனா' படத்தின் ட்ரைலர் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்தின் ட்ரைலரை நாளை மாலை 5.15 மணிக்கு சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிடுவார் என படக்குழு தெரிவித்துள்ளது. இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.