Advertisment

ஹிட் பட நடிகரின் அடுத்த படம் - வெளியிட்ட முன்னணி பிரபலங்கள் 

sivakarthikeyan released the siddharth next movie

Advertisment

நடிகர், தயாரிப்பாளர் என இரண்டு துறைகளில் கவனம் செலுத்தி வருகிறார் சித்தார்த். கடைசியாக இவர் தயாரித்து நடித்த சித்தா படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து இப்போது கமல் - ஷங்கர் கூட்டணியில் உருவாகியுள்ள இந்தியன் 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் ஜூலை 12ஆம் தேதி பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.

இப்படத்தை தொடர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் சித்தார்த் ஒரு படம் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் சித்தார்த் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், போஸ்டரை சிவகார்த்திகேயன், லோகேஷ் கனகராஜ் மற்றும் மாதவன் தங்களது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

sivakarthikeyan released the siddharth next movie

Advertisment

இப்படத்தை ராஜேசகர் இயக்குகிறார். படத்திற்கு ‘மிஸ் யூ’ (Miss You) எனத்தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. கதாநாயாகியாக கன்னட நடிகை ஆஷிகா ரங்கநாத் நடிக்கிறார். இவர் ஏற்கெனவே அதர்வாவின் பட்டத்து அரசன் படத்தில் தமிழுக்கு அறிமுகமாகியிருந்தார். இதையடுத்து இப்படத்தில் நடிக்கிறார். மேலும் கருணாகரன், பால சரவணன், லொள்ளு சபா மாறன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 7 மைல்ஸ் பெர் செகண்ட் என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.

lokesh kanagaraj actor sivakarthikeyan siddharth
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe