Advertisment

சிவகார்த்திகேயன் வெளியிட்ட 'ராபர்' பட ஃபர்ஸ்ட்  லுக் போஸ்டர்

sivakarthikeyan released the first look poster of robber movie

'மெட்ரோ ' பட இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் கதை மற்றும் திரைக்கதையில் எஸ்.எம்.பாண்டி என்பவர் இயக்கியுள்ள படம் 'ராபர்'. இப்படம் சென்னையில் நடந்த ஓர் உண்மைச் சம்பவத்தின் பின்னணியில் உருவாகிறது. இம்ப்ரஸ் ஃபிலிம்ஸ் சார்பில் பத்திரிகையாளர் கவிதா எஸ் இப்படத்தை தயாரித்துள்ளார். தயாரிப்பில் அவருடன் மெட்ரோ ப்ரொடக்ஷன்ஸ் ஆனந்த கிருஷ்ணனும் இணைந்துள்ளார். ஜோகன் சிவனேஷ் என்பவர் இசை அமைத்துள்ளார்.

Advertisment

இப்படத்தில் மெட்ரோ படத்தின் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த சத்யா நாயகனாக நடிக்க, அவருடன் தீபா சங்கர், ஜெயபிரகாஷ், சென்ராயன், டேனி போப் மற்றும் பலர் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின்' டைட்டில் ஃபர்ஸ்ட் லுக் 'எனப்படும் தலைப்பின் முதல் தோற்றத்தை சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார். மே மாதத்தின் இறுதியில் இப்படத்தை வெளியிட உள்ளதாகவும் தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருவதாகவும் படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment
actor sivakarthikeyan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe