style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="6542160493" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ஒரே நேரத்தில் 'மிஸ்டர் லோக்கல்' படத்திலும், ரவிக்குமார் இயக்கும் படத்திலும் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இதில் ரவிக்குமார் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே 60 சதவீதம் முடிவடைந்த நிலையில், இதன் அடுத்தகட்ட படப்பிடிப்பு நேற்று துவங்கியது. இதை அறிவிக்கும் வகையில் சிவகார்த்திகேயன் படப்பிடிப்பில் இயக்குநர் ரவிக்குமார், ரகுலுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. சிவகார்த்திகேயன் விவசாயியாக நடிக்கும் இப்படத்தில் கருணாகரன், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்தை 24 ஏ.எம்.ஸ்டூடியோ சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்கிறார்.