நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய திரை பயணத்தில் ஒரு பக்கம் பெரிய படங்களில் நடித்துக்கொண்டிருந்தாலும், மற்றொரு பக்கம் புதுமுக இயக்குனர்கள், நடிகர்களை திரையுலகில் தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் அறிமுகம் செய்து வருகிறார்.

Advertisment

vaazhl

சிவகார்த்திகேயன் தயாரிப்பு நிறுவனம் இதுவரை இரண்டு படங்களை தயாரித்து வெளியிட்டுள்ளது. முதல் படம் கனா, இரண்டாவது படம் யூ-ட்யூப் பிரபல குழுவான பிளாக் ஷீப் டீமை வைத்து ‘நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா’ என்று இரு படங்களை தயாரித்து, வெற்றி பெற்றுள்ளார். தற்போது அருவி பட இயக்குனர் அருண் பிரபுவுடன் இணைந்து படம் தயாரிப்பதாக அறிவிப்பு வெளியானது. இந்த படத்தின் பெயர் என்ன என்று இன்று காலை அறிவிப்பதாக சொல்லப்பட்டது.

இந்நிலையில் காலை 11 மணிக்கு அறிவித்த சிவகார்த்திகேயன் தயாரிப்பு நிறுவனம், இப்படத்திற்கு ‘வாழ்’ என்று தலைப்பு வைத்து போஸ்டர் வெளியிட்டுள்ளது படக்குழு.