Advertisment

"இதுக்கு முன்னாடி நடந்திருக்கு, ஆனால் இது தான் முதல் முறை" - ட்ரெண்டிங்கில் சிவகார்த்திகேயன் ட்ரைலர்

sivakarthikeyan prince movie trailer no.1 in you tube trending

Advertisment

சிவகார்த்திகேயன், 'டான்' படத்தை தொடர்ந்து பிரபல தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கும் 'ப்ரின்ஸ்' படத்தில் நடித்து வருகிறார். கதாநாயகியாக உக்ரைன் நாட்டு நடிகை மரியா ரியாபோஷாப்கா நடிக்கிறார். சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இப்படத்தை 'ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ்' நிறுவனத்துடன் இணைந்து 'சுரேஷ் புரொடக்ஷன்' நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு அனைத்தையும் முடித்துள்ள படக்குழு அடுத்த கட்ட பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் இரண்டு பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் 'ப்ரின்ஸ்' படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த ட்ரைலரை பார்க்கையில், ஒரு ஸ்கூலில் வாத்தியாராக இருக்கும் சிவகார்த்திகேயனுக்கும் அதே ஸ்கூலில் பணிபுரிய வரும் மரியாவுக்கும் இடையே காதல் வருகிறது. இருவரின் காதலும் திருமணத்தில் முடிந்ததா என்பதை காமெடி ஆக்ஷன் கலந்து சொல்லியிருப்பது போல் தெரிகிறது. ஒரு காட்சியில் "இந்த மாதிரி நிகழ்ச்சி நிறைய நடந்திருக்கு. ஆனா இது தான் முதல் முறை" என்று ஒரு தாத்தா பேசும் வசனம் எந்த நிகழ்ச்சி, எதில் முதல் முறை என்ற கேள்வியை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த ட்ரைலர் தற்போது வரை 2.5 மில்லியன் பார்வையாளர்களை கடந்து யூட்யூபில் ட்ரெண்டிங்கில் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளது.

Prince movie actor sivakarthikeyan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe