பிரதீப் ரங்கநாதன் மற்றும் மமிதா பைஜூ நடிப்பில் அறிமுக இயக்குநர் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘டியூட்’. கடந்த மார்ச்சில் அறிவிக்கப்பட்ட இப்படத்தில் சரத் ​​குமார், ஹிருது ஹாரூன், டிராவிட் செல்வம் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.

Advertisment

இப்படத்தில் ‘குறள்’ என்ற கதாபாத்திரத்தில் மமிதா பைஜூ நடிக்கிறார். இதை அவரது பிறந்தநாளான கடந்த மாதம் 22ஆம் தேதி போஸ்டர் மூலம் தெரிவித்தது படக்குழு. இதையடுத்து பிரதீப் ரங்கநாதனின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இது தொடர்பாக வாழ்த்து தெரிவித்த படக்குழு போஸ்டர் மட்டுமே வெளியிட்டது. அவரது கதாபாத்திரத்தின் பெயரைக் குறிப்பிடவில்லை. பின்பு படப்பிடிப்பு தளத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்களை எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டிருந்தது.         

Advertisment

இப்படம் தீபாவளி வெளியீடாக தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ளது. தமிழகம் மற்றும் கர்நாடகாவில் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இந்த நிலையில் இப்படத்தில் சிவகார்த்திகேயன் கேமியோ ரோலில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருவரும் படப்பிடிப்பு தளத்தில் இருப்பது போல் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் உலா வருகிறது. 

சிவகார்த்திகேயன் சிறப்பு தோற்றத்தில் கடைசியாக விஜய் நடித்த ‘தி கோட்’ படத்தில் நடித்திருந்தார். இதற்கு முன்னதாக கன்னடத்தில் சிவ ராஜ்குமார் நடிப்பில் வெளியான ‘வஜ்ரகாய’, தமிழில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த ‘கனா’ மற்றும் அதன் தெலுங்கு ரீமேக் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். இப்போது மதராஸி மற்றும் பராசக்தி படத்தில் நாயகனாக நடித்து வருகிறார்.

Advertisment