/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/sivakarthikeyan-samantha_1.jpg)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். 'டாக்டர்' பட வெற்றிக்கு பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கிவுள்ள 'டான்' திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தினுடைய இரண்டு பாடல்கள் வெளிவந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப்பெற்றது .
இந்நிலையில் இவருடைய அடுத்த படம் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. யோகி பாபு நடித்து கடந்த ஆண்டு வெளியான 'மண்டேலா' படத்தை இயக்கிய மடோன் அஷ்வின் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ஐசரி கணேஷுடைய வேல்ஸ் ஃபிலிம்ஸ்தயாரிக்கிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை சமந்தா நடிக்கவுள்ளதாக தகவல் வந்துள்ளது. நடிகை சமந்தா இதற்கு முன்பு 2018-ல் வெளியான 'சீமராஜா' படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)