நகைச்சுவை நடிகர் சூரி கடந்த 2017ம் ஆண்டு “அம்மன்” உயர்தர சைவ உணவகத்தை மதுரை காமராஜர் சாலையில் துவக்கினார். இந்த உணவகத்துக்கு மக்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பு கிடைத்ததையடுத்து தற்போது நடிகர் சூரி மேலும் இரண்டு புதிய உணவாக கிளைகளை திறந்துள்ளார்.

Advertisment

sk

“அம்மன்” உயர்தர சைவ உணவகம் மற்றும் “அய்யன்” உயர்தர அசைவ உணவகம் என்ற இரண்டு புதிய கிளைகளை மதுரை அவனியாபுரம், ஏர்போர்ட் பைபாஸ் சாலையில் துவக்கியுள்ளார். இந்த புதிய உணவகங்களை சூரியின் நண்பர் நடிகர் சிவகார்த்திகேயன் இன்று குத்துவிளக்கேற்றி துவக்கிவைத்தார். மேலும் பல்வேறு பிரபலங்கள் மற்றும் பொது மக்கள் கலந்துகொண்ட உணவகத்தின் திறப்புவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. மேலும் திறப்புவிழாவிற்கு வருகைதந்து வாழ்த்திய அனைவருக்கும் நடிகர் சூரி மற்றும் குடும்பத்தினர் தங்களது நன்றியினை தெரிவித்தனர்.