வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன்? - வெளியான லேட்டஸ்ட் தகவல்

sivakarthikeyan next with venkat prabhu

சிவகார்த்திகேயன் தற்போது பிரபல தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கும் 'ப்ரின்ஸ்' படத்தில் நடித்துள்ளார். இப்படம் தீபாவளியை முன்னிட்டு வருகிற 21ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனை தொடர்ந்து மண்டேலா இயக்குநர் அஷ்வின் இயக்கும் 'மாவீரன்' படத்திலும் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் ஒரு படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இதையடுத்து இயக்குநர் வெங்கட் பிரபுவுடன் சிவகார்த்திகேயன் இணையவுள்ளதாக தகவல் வெளியானது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக அன்மையில் நடைபெற்ற ப்ரின்ஸ் பட ட்ரைலர் வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன் பேசியுள்ளார். இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பதாக கூறப்படுகிறது. முன்னதாக 'மாநாடு' படம் வெளியான சமயத்தில் வெங்கட் பிரபுவுடன் சிவகார்த்திகேயன் இணைவதாகவும் அதற்கான பேச்சு வார்த்தை நடந்ததாகவும் தகவல் வெளியானது. அந்த சமயத்தில் இருவரும் அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகியதால் அந்தப் படங்களை முடித்துவிட்டு இருவரும் இணையலாம் என்று சொல்லப்பட்டது.

வெங்கட் பிரபு தற்போது நாக சைதன்யாவை வைத்து தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் 'என்.சி 22' படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் பூஜை விழாவில் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டார். எனவே வெங்கட் பிரபுவும் சிவகார்த்திகேயனும் தாங்கள் ஒப்பந்தம் செய்யப்பட்ட படங்களை முடித்துவிட்டு பிறகு இணைய வாய்ப்புள்ளதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

actor sivakarthikeyan venkat prabhu
இதையும் படியுங்கள்
Subscribe