Advertisment

பிறந்தநாளில் சர்ப்ரைஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட சிவகார்த்திகேயன்

sivakarthikeyan next with ar murugadoss

Advertisment

விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பல வெற்றி படங்களை கொடுக்கும் இயக்குநர்களில் ஒருவர் ஏ.ஆர் முருகதாஸ். தமிழைத்தாண்டி இந்தியிலும் வெற்றிப் படங்களை இயக்கியிருந்தார். கடைசியாக ரஜினியை வைத்து 'தர்பார்' படம் இயக்கியிருந்த நிலையில் அடுத்து அவர் இயக்கும் படம் பற்றிய அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. ஆனால் சிவகார்த்திகேயனுடன் இணையவுள்ளதாக தகவல் வந்தது.

இந்த நிலையில் அந்த தகவல் தற்போது உறுதியாகியுள்ளது. இன்று ஏ.ஆர் முருகதாஸ் பிறந்தநாள்கொண்டாடும் நிலையில், அவருக்கு வாழ்த்து தெரிவித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளார் சிவகார்த்திகேயன். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "எனது 23வது படத்திற்காக ஏ.ஆர் முருகதாஸுடன் இணைவதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அவரின் கதையைக் கேட்டு இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்தேன். இந்த படம் எனக்கு எல்லா அம்சங்களிலும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும், மேலும் படப்பிடிப்பு தொடங்குவதற்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக மிருனாள் தாக்கூர் நடிக்கவுள்ளதாக ஒரு தகவல் உலா வந்து கொண்டிருக்கிறது.

சிவகார்த்திகேயன் தற்போது கமல் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் பெயரிடப்படாதபடத்தில் நடித்து வருகிறார். சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்கும்இப்படத்தின்படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

Advertisment

actor sivakarthikeyan SK 23
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe