mr.chandramouli

Advertisment

sivakarthikeyan

சீமராஜாவை முடித்த கையோடு தற்போது ரவிக்குமார் இயக்கிவரும் சயின்ஸ் பிக்சன் படத்தில் நடித்து வரும் சிவகார்த்திகேயன் கடந்த 7ஆம் தேதி பிளாக் அன் ஒயிட்டில் ஸ்டைலிஷாக எடுத்து படம் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். கோட் சூட் அணிந்து நீளமான முடி, தாடியுடன் காணப்படும் அவர் தன் புதிய படத்தின் தோற்றத்திற்காக வைத்துளாரோ என பலரும் கேட்டதற்கு 'இல்லை, கனா நாயகன் தர்ஷன் யோசனையில் திட்டமிடாமல் திடீர் என்று நடத்திய போட்டோஷூட்' என்றார்.

sivakarthikeyan beard look

Advertisment

இதைத்தொடர்ந்து இசையமைப்பாளர் அனிருத்... இந்த கெட்டப்பில் ஒரு படம் பண்ணுவோமா... தீம் மியூசிக் ரெடி என்று ரிப்ளை செய்ய அதற்கு சிவகார்த்திகேயன்... சார் என்ன சார் கேட்கிறீங்க. நம்ம பண்றோம் சார். ஒரு ஹிட் ஆல்பம் கிடைக்க போகுது நான் ரெடி சார். நாளை வந்து சந்திக்கிறேன். வேலையை தொடங்குவோம் என்று பதிவு செய்து மேலும் அருண்ராஜா காமராஜாவின் கமென்டிற்கும் ரீபிலை செய்தார்.