
தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன், தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் அமரன் படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். அடுத்தாக வெங்கட் பிரபு, ரவிக்குமார் உள்ளிட்ட இயக்குநர்களுடன் ஒரு படத்தில் நடிப்பதாக ஒப்புக்கொண்டுள்ளார். இதனிடையே டான் படத்தை இயக்கிய சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனிடையே 2010ஆம் ஆண்டு ஆர்த்தி என்ற அவரது மாமா மகளை திருமணம் செய்தார். இந்தத் தம்பதிக்கு ஆராதனா என்ற பெண் குழந்தையும் குகன்தாஸ் என்ற ஆண் குழந்தையும் இருக்கிறார்கள். இதில் ஆராதனா, சிவகார்த்திகேயன் தயாரித்து நடித்த கனா படத்தில் ‘வாயாடி பெத்த புள்ள’ பாடலை பாடி பலரது கவனத்தைப் பெற்றார்.
கடந்த ஜூன் மாதன் 2ஆம் தேதி மூன்றாவது குழந்தையாக தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக சிவகார்த்திகேயன் தெரிவித்திருந்தார். தற்போது சிவகார்த்திகேயன் தனது 3வது குழந்தைக்கு ‘பவன்’ என்று பெயர் சூட்டியுள்ளார். இது தொடர்பான பெயர் சூட்டு விழாவில் எடுத்த வீடியோவை சிவகார்த்திகேயன் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
Aaradhana - Gugan - PAVAN ❤️❤️❤️ pic.twitter.com/T0YNorVIQb— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) July 15, 2024