Skip to main content

பிப்ரவரியில் தொடங்கும் சிவகார்த்திகேயன் படம் 

Published on 22/01/2019 | Edited on 22/01/2019
siva

 

 

சிவகார்த்திகேயன் தற்போது ராஜேஷ்.எம் இயக்கத்திலும், ரவிக்குமார் இயக்கத்திலும் ஒரே நேரத்தில் நடித்து வரும் நிலையில் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் அடுத்ததாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு வரும் பிப்ரவரி இரண்டாவது பாதியில் துவங்கவிருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். அரசியல் கலந்த த்ரில்லர் கதையாக உருவாகும் இப்படத்தை 24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் தயாரிக்கிறது. மேலும் இந்த படத்தின் முதற்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைப்பெற்று  வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இந்த சிஸ்டத்தை மாற்ற வருகிறாரா சிவகார்த்திகேயன்..? - வெளியானது ஹீரோ டீசர்!

Next Story

சிவகார்திகேயனுடன் நடிக்கும் பிரபல இயக்குனரின் மகள் 

Published on 18/02/2019 | Edited on 18/02/2019
kalyani

 

 

சிவகார்த்திகேயன் - ராஜேஷ்.எம் கூட்டணியில் உருவாகி வரும் 'மிஸ்டர்.லோக்கல்' மற்றும் ரவிக்குமார் இயக்கத்திலும் நடித்து வரும் நிலையில் அடுத்ததாக பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ள நிலையில் இதில் சிவகார்த்திகேயன் ஜோடியாக பிரபல இயக்குநர் பிரியதர்ஷனின் மகள் கல்யாணி நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கல்யாணி பிரிதர்ஷன் ஹலோ என்ற தெலுங்கு படத்திலும், தமிழில் துல்கர் சல்மானுடன் 'வான்' படத்திலும்  நடிக்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்த படத்தின் முதற்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.