மிஸ்டர்.லோக்கல், சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான படம். சிவா மனசுல சக்தி படத்தை இயக்கிய எம்.ராஜேஷ் இயக்கிய இப்படத்தில் சிவாவுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்தார். யோகி பாபு, சதீஷ், ரோபோ சங்கர், ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் நடித்தனர். இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை.

sivakarthikeyan

Advertisment

Advertisment

இப்படத்தை அடுத்து இரும்புத்திரை இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க ஒப்பந்தமாகினார். ஹீரோ என்று பெயரிடப்பட்ட அப்படத்திற்கு கடந்த மார்ச் 13ஆம் தேதி பூஜை போடப்பட்டு ஷூட்டிங் தொடங்கப்பட்டது.

விஸ்வாசம் படத்தை விநியோகம் செய்த கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம்தான் இப்படத்தை தயாரிக்கிறார். பிரபல இயக்குநர் பிரியதர்ஷனின் மகள் கல்யாணி பிரியதர்ஷன் இதில் ஹீரோயினாக நடிக்கிறார். நாச்சியார் படத்தில் நடித்த இவானாவும் இதில் நடிக்கிறார். யுவன் இசையமைக்க, ஜார்ஜ்.சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார்.

இப்படத்தின் ஷூட்டிங் பாதி முடிவடைந்த நிலையில் மீதமுள்ள ஷூட்டிங்கும் விரைவில் தொடங்கப்படும் என்று தெரிகிறது. இந்நிலையில் இப்படம் கிறிஸ்துமஸ் விடுமுறையில் ரிலீஸாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வேலைக்காரன் படமும் கிறிஸ்துமஸ் விடுமுறையில் வெளியானது குறிப்பிடத்தக்கது.