/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/sk-ayalan.jpg)
'ரெமோ' படத்தை தயாரித்த 24 ஏ.எம் தயாரிப்பில் உருவாகி வந்த படம், 'அயலான்'. 'இன்று நேற்று நாளை' பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் இப்படம் உருவாகி வருகிறது.
இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், இஷா கோபிகர், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வந்தனர். நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்ய, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வந்தார். ஃபைனான்ஸ் சிக்கலால் நீண்ட நாட்களாக இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படாமல் இருந்தது.
இறுதியில், இந்தப் படத்தின் உரிமையைக் கைப்பற்றியது கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம். அதனைத் தொடர்ந்து படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வந்தது. இடையே, நெல்சன் இயக்கத்தில் உருவாகும் 'டாக்டர்' படத்தில் நடிக்கத் தொடங்கினார் சிவகார்த்திகேயன். இந்தப் படத்தையும் கே.கே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் எஸ்.கே புரொடக்ஷன்ஸுடன் இணைந்து தயாரித்தது.
தற்போது 'டாக்டர்' படத்துக்கு ஒரே ஒரு பாடலைத் தவிர, ஒட்டுமொத்தப் படப்பிடிப்பும் முடிவடைந்துவிட்டது. இதனால், 'அயலான்' படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளது படக்குழு. இதில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் ஆகியோர் நடித்து வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)