Advertisment

"60 நிமிட உரையாடல்..." - ரஜினி குறித்து சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி

 sivakarthikeyan met rajinikanth got his blessings for DON movie success

Advertisment

'டாக்டர்' படத்தின் வெற்றிக்குப் பிறகு சிவகார்த்திகேயன் அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடித்த படம் டான். இப்படத்தில் கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடிக்க, எஸ்.ஜே சூர்யா, சமுத்திரக்கனி, சூரி, பால சரவணன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக இளைஞர்கள் இப்படத்தை திரையரங்குகளில் கொண்டாடி வருகின்றனர். சமீபத்தில் இப்படத்தை பார்த்த ரஜினிகாந்த் சிவகார்த்திகேயனை போனில் அழைத்துப் பாராட்டியுள்ளார்.

இந்நிலையில், சிவகார்த்திகேயன் நடிகர் ரஜினிகாந்த்தை அவரது வீட்டிற்குச் சென்று சந்தித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சாரை சந்தித்து ஆசி பெற்றேன். அந்த 60 நிமிட உரையாடல் என் வாழ்நாளில் மறக்க முடியாத நினைவாக இருக்கும். டான் படத்தைப் பாராட்டியதற்கும்,எனக்காக உங்கள் நேரத்தை ஒதுக்கியதற்கும்நன்றி சார்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Don Actor Rajinikanth actor sivakarthikeyan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe