sivakarthikeyan meet his fans

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன், தற்போது கமல்ஹாசன் தயாரிக்கும் அமரன் படத்தில் நடித்து வருகிறார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இப்படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்க ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். தமிழக ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் காஷ்மீரில் கொல்லப்பட்ட சம்பவத்தை வைத்து உருவாகும் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

Advertisment

இதனிடையே ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தனது 23வது படத்திலும் நடித்து வருகிறார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மணி வசந்த் கமிட்டாகியுள்ளார். அனிருத் இசைப்பணிகளை மேற்கொள்கிறார். படத்தின் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

Advertisment

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் தனது நற்பணி இயக்க நிர்வாகிகளை சந்தித்துள்ளார். சென்னை போரூரில் ஒரு மண்டபத்தில் நடந்த இந்த சந்திப்பில் தமிழ்நாடு அளவில் இருக்கும் சிவகார்த்தியேன் நற்பணி இயக்கத்தை சேர்ந்த மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.