'டான்' படத்தை தொடர்ந்து தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கும் 'ப்ரின்ஸ்' படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. மேலும் இப்படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாகவுள்ளது. இதையடுத்து 'மண்டேலா' படத்தின் இயக்குநர் மடோன் அஷ்வின் இயக்கும் ’மாவீரன்’ படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்கவுள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் அனுபவ நடிகை சரிதா, மிஷ்கின் மற்றும் யோகிபாபு நடிக்கவுள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் நேற்று தொடங்கியுள்ளது. பூஜை நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் உள்ளிட்ட படக்குழுவினரோடு இயக்குநர் ஷங்கரும் கலந்துகொண்டார். இந்நிலையில் பூஜை நிகழ்ச்சியின் புகைப்படங்களை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது.
பூஜையுடன் படப்பிடிப்பை தொடங்கிய 'மாவீரன்' படக்குழு (படங்கள்)
Advertisment
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-08/357.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-08/358.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-08/359.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-08/360.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-08/361.jpg)