மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஷ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் படம் 'மாவீரன்'. இப்படத்தில் கதாநாயகியாக அதிதி ஷங்கர் நடிக்கிறார். சரிதா, இயக்குநர் மிஷ்கின், யோகி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். பரத் சங்கர் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. முன்னதாக வெளியான படத்தின் டைட்டில் வீடியோ படத்தின் மீது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை உருவாக்கியது.
இந்த நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி 'சீனா சீனா..' என்றபாடல் வருகிற 17 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான க்ளிம்ஸேவைபடக்குழு வெளியிட்டுள்ளது. அதனைப் பார்க்கையில் ஒரு குத்து பாடல் போல தெரிகிறது. மேலும், சிவகார்த்திகேயன் அதில் பெரிய கூட்டத்தோடு நடனமாடுகிறார். அவரது ரசிகர்களுக்கு இப்பாடல் விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த வீடியோவை தற்போது சிவகார்த்திகேயன் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர். சிவகார்த்திகேயன் நடிப்பில் 'அயலான்' படம் உருவாகி வருகிறது. மேலும் கமல் தயாரிப்பில் ஒரு படம் நடிக்க கமிட்டாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.