/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/1283.jpg)
சிவகார்த்திகேயன், 'டான்' படத்தை தொடர்ந்து பிரபல தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கும் 'ப்ரின்ஸ்' படத்தில் நடித்து வருகிறார். கதாநாயகியாக உக்ரைன் நாட்டு நடிகை மரியா ரியாபோஷாப்கா நடிக்கிறார். சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இப்படத்தை 'ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ்' நிறுவனத்துடன் இணைந்து 'சுரேஷ் புரொடக்ஷன்' நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.
இதையடுத்து சிவகார்த்திகேயன் அடுத்ததாக 'மண்டேலா' படத்தின் இயக்குநர் மடோன் அஷ்வின் இயக்கும் மாவீரன் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் மோஷன் போஸ்டர் இன்று காலை வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அடுத்தடுத்து மோஷன் போஸ்டர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியானதால் அவரது ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)