sivakarthikeyan maaveeran 2nd single update

மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஷ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் படம் 'மாவீரன்'. இப்படத்தில் கதாநாயகியாக அதிதி ஷங்கர் நடிக்கிறார். சரிதா, இயக்குநர் மிஷ்கின், யோகி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். பரத் சங்கர் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் டைட்டில் வீடியோ மற்றும் முதல் பாடலான ‘ஸீனா ஸீனா’ லிரிக் வீடியோ ஆகியவை முன்னதாக வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றன.

Advertisment

இப்படம் வருகிற ஜூலை 14 ஆம் தேதி வெளியாகிறது. தமிழகத்தில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்து தற்போது போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக அண்மையில் தனது டப்பிங் பணியை முடித்தார் சிவகார்த்திகேயன். இந்நிலையில் இப்படத்தின் இரண்டாவது பாடல் குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. 'வண்ணாரப்பேட்டையிலே...' என்ற இரண்டாவது பாடல் வருகிற 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

Advertisment

இதற்கான ப்ரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் இயக்குநர் மற்றும் இசையமைப்பாளர் யாரை இப்பாடலுக்கு பாட வைக்கலாம் என யோசிக்கின்றனர். பாடகியாக இப்படத்தின் கதாநாயகி அதிதி ஷங்கரை தேர்வு செய்து அவரை தொலைபேசியில் அழைக்கின்றனர். அவர் சக பாடகர் யார் என்று கேட்க உடனே இருவரும் சித் ஸ்ரீராம் என பொய் சொல்கின்றனர். சித் ஸ்ரீராமா என ஆச்சரியப்பட்ட அதிதி உடனே வருவதாகச் சொல்கிறார். இதே போல் சிவகார்த்திகேயனுக்கு ஃபோன் செய்து சக பாடகி ஸ்ரேயா கோஷல் எனச் சொல்கின்றனர். இருவரும் ரெக்கார்டிங் ஸ்டூடியோவுக்கு வந்தவுடன் சண்டை போடுகிறார்கள். சிவகார்த்திகேயன் படங்களில் வழக்கமாக ஒரு அப்டேட்டுக்கான ப்ரோமோஷன் வீடியோ நகைச்சுவை கலந்த வீடியோவாக இருக்கும். அந்த வகையில் இந்த வீடியோவும் இருக்கிறது.