Skip to main content

நான் யாருக்கு செய்றேன்னு சொல்லமாட்டேன், ஆனா செய்வேன் - சிவகார்த்திகேயன்  

Published on 08/01/2019 | Edited on 08/01/2019
siva

 

சிவகார்த்திகேயன் ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரித்த முதல் திரைப்படம் கனா. ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ், தர்ஷன் நடிக்க, இவர்களுடன் சிவகார்த்திகேயன் சிறப்பு தோற்றத்தில் நடித்த இந்த படம் கடும் போட்டிக்கு இடையே வெற்றி பெற்று திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தில் பணிபுரிந்த கலைஞர்களுக்கு ஷீல்டு வழங்கும் வெற்றி விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. அப்போது விழாவில் கலந்துகொண்ட சிவகார்த்திகேயன் பேசியபோது...

 

"நடிகர் தான் என் அடையாளம், அது தான் நிரந்தரம். தயாரிப்பாளர் என்பதெல்லாம் அதில் இருந்து கிடைத்தது தான். நிறைய படங்களுடன் ரிலீஸ் ஆனாலும், அதில் ஹீரோ இல்லாத ஒரு படம் தான் இது. ஆனாலும் வெற்றியை எட்ட காரணம் அதை ரிலீஸ் செய்து கொடுத்த ஆருத்ரா ஃபிலிம்ஸ்க்கு நன்றி. வருத்தப்படாத வாலிபர் சங்கம் எனக்கு திருப்புமுனை தந்த படம், இது நான் தயாரித்த முதல் படம். என் சினிமா கேரியரின் இந்த இரண்டு முக்கியமான தருணங்களில் உடன் இருந்திருக்கிறார் சத்யராஜ் சார். திபு நினன் தாமஸ் இசை படத்துக்கு பெரிய பலம், வைக்கம் விஜயலக்‌ஷ்மி அவர்களின் குரலும் ஆசிர்வாதமும் நல்ல துவக்கத்தை தந்தது. ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு தேசிய விருது கிடைக்கும் என்று ட்விட்டரில் ஒரு கமெண்ட் பார்த்தேன். அது இந்த படத்தில் நடந்தாலும் மகிழ்ச்சி, வேறு படத்தில் நடந்தாலும் மகிழ்ச்சி. அந்த விருதுக்கு ஐஸ்வர்யா தகுதியானவர். 20 மேட்ச்க்கான காட்சிகளை படம் பிடித்து கொடுத்தாலும் அதை சிறப்பாக கட் செய்த ரூபனுக்கு நன்றி. தினேஷ் கிருஷ்ணன் மிக அழகாக ஒளிப்பதிவு செய்பவர். என்னை பாலசுப்ரமணியம் சாருக்கு பிறகு அழகாக காட்ட நிறைய முயற்சிகள் எடுப்பார். 

 

 

எனக்கு எந்த அழுத்தமும் கொடுக்காமல் எல்லா சுமையையும் தன் தோளில் தாங்கிய கலையரசுக்கு நன்றி. 'அற்புதமான நண்பர்கள் சேர்ந்தால் வெற்றிகள் குவியுமடா' என்ற பாடல் வரி எனக்கு மிகவும் பிடிக்கும். அதை நான் நம்புகிறேன், உணர்கிறேன். இந்த படம் எங்கள் பேனருக்கு லாபகரமான படம். இந்த லாபத்தில் ஒரு பகுதியை விவசாயிகளுக்கு ஒதுக்கி உதவி செய்ய இருக்கிறேன். நான் யாருக்கு என்ன செய்யப்போகிறேன் என்று நிச்சயமாக சொல்ல போவதில்லை. ஆனால் இந்த படம் எப்படி பல புதுமுக கலைஞர்களின் வாழ்க்கையை மாற்றியதோ அதேபோல் எங்கேயோ எதோ ஒரு மூலையில் இருக்கும் நலிந்த விவசாயின் வாழ்க்கையை கண்டிப்பாக நான் செய்யப்போகும் உதவி மாற்றும். இதை நான் சொல்லாமல் செய்யவேண்டும் என்று தான் நினைத்தேன். ஆனால் படத்தில் இவ்வளவு விஷயங்களை சொல்லிவிட்டு இதை இங்கு பதிவு செய்யாமல் போனால் தப்பு என்று தோன்றியது. நாம் மட்டும் இந்த வெற்றியை கொண்டாடினால் நன்றாக இருக்காது. இது விவசாயிகளுக்கும் போய் சேர வேண்டும்" என்றார்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'கனா படத்தினால் தான் கிரிக்கெட்டர் ஆனேன்' - மனம் திறந்த யுஏஇ கேப்டன்

Published on 14/06/2022 | Edited on 14/06/2022

 

'I became a cricketer because of the movie Kana' - UAE captain with an open mind

 

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் 2018-ஆம் ஆண்டு வெளியான படம் 'கனா'. இந்த படத்தை பாடகர், பாடலாசிரியர், நடிகர் என அறியப்பட்ட அருண்ராஜா காமராஜ் இயக்கியிருந்தார். இப்படத்தில்  சத்யராஜ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. தமிழில் கிடைத்த வெற்றியை தொடர்ந்து தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட்டது. இதனையடுத்து சமீபத்தில் சீன மொழியிலும் இப்படம் வெளியானது. 

 

இந்நிலையில் சிவகார்த்திகேயன், யுஏஇ-ன் மகளிர் கிரிக்கெட் அணி அண்டர் 19-ன் கேப்டன் தீர்த்தா சதிஷிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் அணி, ஐசிசி அண்டர் 19-ன்  மகளிர் டி20 உலகக் கோப்பைக்கு தாய்லாந்து அணியை வீழ்த்தி தேர்வுபெற்றது. இந்த போட்டியில் தன் சிறப்பான ஆட்டத்தின் மூலம் அணி வெற்றிக்கு காரணமாக திகழ்ந்தார் தீர்த்தா சதிஷ். 

 

தீர்த்தா சதிஷ் , தமிழகத்தில் பிறந்து துபாயில் வாழ்கிற இவர் சமீபத்தில் ஊடகத்திற்கு ஒரு பேட்டி அளித்தார். அதில், " முதலில் அமீரக பயிற்சியாளர் ஒருவர் என்னிடம் அண்டர் 19-ன் டீமில் என்னை சேரச்சொல்லி கேட்டார். அப்போது கிரிக்கெட் மீது ஆர்வமில்லை என கூறி நிராகரித்து விட்டேன். அதன் பிறகு தான் 'கனா' படம் வெளியானது. அந்த படத்தை பார்த்த பிறகு 'நான் ஏன் முயற்சிக்கக்கூடாது' என்ற எண்ணத்துடன் முயற்சி செய்து இப்போது அண்டர் 19-ன் டீமிற்கு கேப்டனாக உள்ளேன்" என கூறி நெகிழ்ந்தார். இதனிடையே தீர்த்தா சதிஷ் அளித்த பேட்டியை சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, " இது கனா படத்திற்கு கிடைத்த மற்றுமொரு அங்கிகாரம் " என குறிப்பிட்டு தீர்த்தா சுரேஷிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

 

 

Next Story

சீனாவில் வெளியாகும் சிவகார்த்திகேயன் திரைப்படம்

Published on 25/02/2022 | Edited on 25/02/2022

 

kanaa movie release china

 

பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட  ‘கனா’ படத்தில், ஹீரோயினாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்தார். படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன், சத்தியராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்தை பிரபல பாடகர், பாடலாசிரியர், நடிகராக அறியப்பட்ட அருண்ராஜா காமராஜ் இயக்கினார். சிவகார்த்திகேயன் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படமாக வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதோடு, வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. இதனைத்தொடர்ந்து கனா படத்திற்கு தமிழில் கிடைத்த வெற்றியை தொடர்ந்து தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட்டது. 

 

இந்நிலையில் இப்படம்  சீனா மொழியில் வெளியாகியுள்ளது. அதன்படி ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான 'கனா' சீனாவில் மார்ச் 18 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இத்தகவலை தனது ட்விட்டர் பதிவின் மூலம் உறுதி செய்த படத்தின் தயாரிப்பாளர் நடிகர் சிவகார்த்திகேயன் அதற்கான போஸ்டரை வெளியிட்டுள்ளார்.