/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/siva_89.jpg)
அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘டான்’ திரைப்படம் உருவாகிவருகிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். கல்லூரி கதைக்களத்தில், முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகும் இப்படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சூரி கல்லூரி மாணவர்களாக நடித்துவருவதாகக் கூறப்படுகிறது. படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் எஸ்.ஜே. சூர்யா நடிக்கிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சமீபத்தில் வெளியான படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கும் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார். இயக்குநர்மடோன் அஸ்வின், யோகி பாபு நடித்த 'மண்டேலா' படத்தை இயக்கியதன் மூலம்அனைவரின் கவனத்தையும் பெற்றார். இப்படத்தை தொடர்ந்து வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தை இயக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)