விஷால் டீமுடன் இணையும் சிவகார்த்திகேயன்...அதிகாரபூர்வ அறிவிப்பு !

sivakarthikeyan

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="6542160493"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த 'சீமராஜா' படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் சிவா தற்போது ஒரே நேரத்தில் 'இன்று நேற்று நாளை' இயக்குனர் ரவிக்குமார் மற்றும் ராஜேஷ்.எம் இயக்கத்தில் உருவாகும் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் சிவகார்த்திகேயன் இவ்விரு படங்களை தொடர்ந்து அடுத்ததாக 'இரும்புத்திரை' பட இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவிருப்பதாக சில நாட்களுக்கு முன் தகவல் பரவியது. இந்நிலையில் தற்போது இந்த தகவலை உறுதிப்படுத்தி 24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் நிறுவனர் ஆர்.டி.ராஜா தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்... "நல்ல பொழுதுபோக்கான படங்களை கொடுத்துவரும் இந்த அழகான பயணத்தில், இன்று உங்கள் அனைவரின் ஆசிர்வாதத்தோடும், ஆதரவோடும் புரொடக்‌ஷன்ஸ் எண் 7வது படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் பி.எஸ்.மித்ரனுடன் இணைவதில் மகிழ்ச்சி. மற்ற தகவல்கள் அணைத்தும் விரைவில் வெளியாகும்" என்று பதிவிட்டுள்ளார். மேலும் இயக்குனர் பி.எஸ்.மித்ரனும் தன் ட்விட்டர் பக்கத்தில் இதை உறுதிப்படுத்தியுள்ளார்.

sivakarthikeyan ps mithran
இதையும் படியுங்கள்
Subscribe