Sivakarthikeyan helped eduction student working at a puncture shop

Advertisment

தமிழ் சினிமா நடிகர்கள் பலர் ஏழை எளிய மாணவர்களின் கல்வி செலவை ஏற்று அவர்களைபடிக்க வைக்கின்றனர்.அந்தவகையில்நடிகர் சிவகார்த்திகேயன் படிப்பதற்கு பணமில்லாமல் பஞ்சர் கடையில் வேலை பார்த்த வந்த தேவசங்கரி என்ற மாணவியை படிக்க வைத்துள்ளார். மாணவி தேவசங்கரி 12 ஆம் வகுப்பு முடித்துவிட்டு தான் விரும்பிய நர்சிங் படிப்பை படிக்க வசதி இல்லாமல்தனது தந்தை நடத்தி வந்த பஞ்சர் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இது தொடர்பான செய்திகள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.

இதை அறிந்த நடிகர் சிவகார்த்திகேயன் மாணவி தேவசங்கரியைதொடர்பு கொண்டு பேசியுள்ளார். மேலும் அந்த மாணவியை நாகப்பட்டினத்தில் உள்ள நர்சிங் கல்லூரியில் படிக்க ஏற்பாடு செய்துள்ளார். இதனையடுத்துமாணவி தேவசங்கரி சிவகார்த்திகேயனுக்கு நன்றி தெரிவித்துள்ளார். மாணவியின் கல்விக்கு உதவிய சிவகார்த்திகேயனுக்கு பலரும் பாராட்டுக்களைத்தெரிவித்து வருகின்றனர்.