அண்மையில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மிஸ்டர் லோக்கல் படம் உலகம் முழுவதும் வெளியானது. இந்த படம் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவில் இல்லை என்பதால் மீண்டும் சிவா மீது கடுமையான விமர்சனங்கள் வந்து பாய்ந்தன. இப்படம் தோல்வி படம்தான் என்று சிவாவே ஒரு மேடையில் ஒப்புக்கொண்டார்.

Advertisment

kiara advani

தற்போது சிவா, பி.எஸ் மித்ரன் இயக்கத்தில் ஹீரோ என்றொரு படத்தின் இரண்டாம் கட்ட ஷூட்டிங்கில் நடித்து வருகிறார். இந்த மாதமே பாண்டிராஜ் இயக்கத்தில் அனு இமானுவேல் ஹீரோயினாக நடிக்கும் சிவாவின் 16வது படத்தின் ஷூட்டிங் தொடங்கப்படும் என்று சொல்லப்படுகிறது. அந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

இந்த படத்தை தொடர்ந்து சிவாவின் 17வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்குகிறார். அதை லைகா நிறுவனம் தயாரிக்கிறது என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியானது. தற்போது இந்த படத்திற்கான கதை விவாதம் மற்றும் நடிகர் நடிகைகள் யார் என்ற விவாதம் பேச்சு வார்த்தையில் உள்ளதாம். சிவாவும் விக்னேஷ் சிவனும் பாலிவுட் நடிகை கியாரா அத்வானியை நடிக்க வைக்கலாம் என்ற யோசனையில் உள்ளனர் என்று சொல்லப்படுகிறது.

தோனி பையோபிக்கில் சாக்‌ஷி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கியாரா அத்வானி, அதனை அடுத்து பல சர்ச்சை படங்களில் நடித்து வருகிறார். லஸ்ட் ஸ்டோரீஸ் என்ற நெட்பிளிக்ஸ் படம் ஒன்றில் அவரது ஒரு காட்சி மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அர்ஜுன் ரெட்டி ஹிந்தி ரீமேக்கில் இவர்தான் ப்ரீத்தி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இது மட்டுமல்லாமல் ஹிந்து கி ஜிவானி என்ற படத்திலும் நடிக்கிறார். இந்த டைட்டிலே மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment