Advertisment

“அந்த மாதிரி சீன் மட்டும் வச்சிராதீங்க”- சிவகார்த்திகேயன் கண்டிஷன்...

ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, சதீஷ், ரோபோ ஷங்கர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'Mr.லோக்கல்'. இப்படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசயமைக்க, ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. வருகிற மே 17ஆம் தேதி படம் உலகமெங்கும் வெளியாகிறது.

Advertisment

rajesh

இந்நிலையில் நேற்று இப்படத்திற்கான பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் நயன்தாராவை தவிர சிவகார்த்திகேயன், இயக்குனர் ராஜேஷ் ,ரோபோ ஷங்கர், தயாரிப்பாளர் , இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

alt="natpe thunai ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="e5169b68-f1ac-4912-b0e4-78de2fe928c0" height="107" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/natpe%20thunai%20ad%20336x-105.jpg" width="343" />

Advertisment

அப்போது பேசிய இயக்குனர் ராஜேஷ், “ ஞானவேல்ராஜா என்னிடம் நான் முதன்முறையாக குடும்பத்தைவிட்டு வெளியே வந்து படம் எடுக்கிறேன் இது நல்லப்படியாக ஓடவேண்டும் என்று மட்டும்தான் சொன்னார். இதனையடுத்து நானும் இப்படி காமெடி, ஃபைட் வைக்க வேண்டும் என யோசிக்கத் தொடங்கிவிட்டேன். இதனையடுத்து சிவா என்னிடம், நம்ப இந்த படத்தில் டாஸ்மாக் சீன், குடித்துவிட்டு பாடுவது, பெண்களை பற்றி இழிவாக பாடுவது போன்ற எந்த விஷயமும் இல்லாமல் ஒரு நல்ல பொழுதுபோக்கான படம் எடுப்போம் என்றார். இந்த இரண்டு விஷயங்கள் மட்டும்தான் படம் எடுக்கத் தொடங்குவதற்கு முன்பு என் மைண்டில் இருந்தது. இதற்காக சரியாக பணி செய்து சக்ஸஸ்ஃபுல்லாக முடித்திருக்கிறேன் என்று நம்புகிறேன்” என்று கூறினார்.

mr.local sivakarthikeyan
இதையும் படியுங்கள்
Subscribe