ADVERTISEMENT

சிவகார்த்திகேயன் வெளியிட்ட சூப்பர் அப்டேட்... குஷியில் ரசிகர்கள்

01:11 PM May 05, 2022 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘டான்’ திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். கல்லூரி கதைக்களத்தில், முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகியுள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சூரி கல்லூரி மாணவர்களாக நடித்துள்ளனர். படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் எஸ்.ஜே சூர்யா நடித்திருக்கிறார். இப்படத்தின் அனைத்து பணிகளையும் நிறைவு செய்த படக்குழு வெளியீட்டு பணியில் தீவிரம் காட்டி வருகிறது.

இந்நிலையில் டான் படத்தின் ட்ரைலர் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, டான் படத்தின் ட்ரைலர் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வும் நடைபெறும் எனவும், அதில் படக்குழுவினர் அனைவரும் பங்கேற்பார்கள் என்றும் படக்குழு தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் வரும் 13 ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT