/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/sivakarthikeyan_25.jpg)
அட்லீயின் உதவி இயக்குநரான சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் படம் 'டான்'. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்து வருகிறார். லைக்கா ப்ரொடக்சன்ஸ் மற்றும் சிவகார்த்திகேயன் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சூரி, சமுத்திரக்கனி, காளி வெங்கட், முனீஸ்காந்த் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பலரும் நடித்து வரும் இப்படத்தில், கல்லூரி மாணவனாக சிவகார்த்திகேயன் நடிக்கிறார்.
கடந்த பிப்ரவரி மாதத்தின் இரண்டாம் வாரத்தில் பூஜையுடன் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு, கோயம்புத்தூர் சுற்றுவட்டாரப் பகுதியில் முழுவீச்சில் நடைபெற்று வந்தது. தற்போது, டான் படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பை நிறைவுசெய்துள்ள படக்குழு, இரண்டாம் கட்டப் படப்பிடிப்பிற்காக ஆயத்தமாகி வருகிறது. தற்போதுகிடைத்துள்ள தகவலின்படி, இரண்டாம் கட்டப் படப்பிடிப்பை அடுத்த வாரத்தில் தொடங்கபடக்குழு திட்டமிட்டுள்ளதாகதெரிகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)