sivakarthikeyan don movie release update

Advertisment

அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘டான்’ திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். கல்லூரி கதைக்களத்தில், முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகும் இப்படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சூரி கல்லூரி மாணவர்களாக நடித்துவருவதாகக் கூறப்படுகிறது. படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் எஸ்.ஜே சூர்யா நடிக்கிறார். படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ள படக்குழு, இறுதிக்கட்ட பணியில்தீவிரம் காட்டி வருகிறது. முதலில் 'டான்' திரைப்படம் பிப்ரவரி மாதத்தில் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில் கரோனாமூன்றாவது அலை காரணமாக படத்தின் ரிலீஸ் மார்ச் 25 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில் 'டான்' படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளிப்போகவுள்ளதாகதகவல் வெளியாகியுள்ளது. சிவகார்திகேயனின்டான் திரைப்படம் வெளியாகும் மார்ச் 25 ஆம்தேதி அன்று ராஜமௌலி இயக்கத்தில் பிரமாண்டமாக தயாராகியுள்ள ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் வெளியாகவுள்ளது. ஆர்.ஆர்.ஆர் படத்திற்கு இந்தியா முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்புகள் உள்ளதால் 'டான்' படத்தை அன்றையதினம் வெளியிட்டால் படத்தின் வசூல் பாதிக்கும் என கருதிய படக்குழு 'டான்' படத்தை கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.