Advertisment

கேக் வெட்டி கொண்டாடிய சிவகார்த்திகேயன் படக்குழு

Sivakarthikeyan 'Don' film crew celebrating the movie success

Advertisment

'டாக்டர்' பட வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் 'டான்'. 'லைகா ப்ரொடக்ஷன்ஸ்' தயாரித்துள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். எஸ்.ஜே சூர்யா, சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கியுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். 'ரெட் ஜெயண்ட் மூவிஸ்' வெளியிட்டுள்ள இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. குறிப்பாக இளைஞர்கள் மற்றும் குடும்பத்தினர் இப்படத்தை வெற்றிப்படமாக்கியுள்ளனர்.

இந்நிலையில் 'டான்' பட வெற்றியை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளது. இது தொடர்பான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் படக்குழு பகிர்ந்துள்ளது. சிவகார்த்திகேயன், எஸ்.ஜே சூர்யா, இயக்குநர் சிபி சக்கரவர்த்தி உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் இடம்பெற்றுள்ள இப்புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

actor sivakarthikeyan don movie
இதையும் படியுங்கள்
Subscribe